Monday, January 19, 2004
தைப் பொங்கல் - தமிழர் திருநாள் - 4
மூன்றாவது நாளான மாட்டுப் பொங்கலுடன் இன்னொரு சுவையான வேடிக்கைக் கதை இணைக்கப்பட்டுள்ளது. ஒரு தடவை சிவன் நந்தியின் மூலம் உலகிலுள்ள மக்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அச் செய்தி இதுதான். மக்களே நீங்கள் மாதத்திற்கு ஒரு தடவை உண்ணுங்கள். தினமும் எண்ணெய் தேய்த்து நீராடுங்கள். நந்தி செய்தியைத் தெரிவிக்கும் போது மாறித் தெரிவித்துவிட்டார். அதாவது தினமும் உண்ணுங்கள், மாதம் ஒரு தடவை எண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள். இதனால் மக்கள் தினமும் உண்ண ஆரம்பிக்கவே உணவுப் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்ததது. அதற்காக மனிதர் விவசாயம் செய்ய வேண்டியதாயிற்று. நந்தி செய்த குளறுபடிக்குத் தண்டனையாக மக்களுடனே தங்கி அவர்களுக்கு விவசாயத்தில் உதவும்படி அவருக்கு கட்டளையிட்டுவிட்டார் சிவன். இந்த உதவிக்காக மக்கள் மாட்டுக்குப் பொங்கலிட்டு நன்றி கூறுகிறார்கள் எனப்படுகிறது. இந்தக் கதை யாராலோ பின்னர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மாட்டுப் பொங்கலின் போது பெண்கள் வர்ணமூட்டப்பட்ட சாத உருண்டைகளை காகத்திற்கு வழங்கித் தமது சகோதரர்களiன் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வதாகக் கூறப்படுகிறது. அன்று சகோதர சகோதரிகள் எங்கிருந்தாலும் ஒருவரை ஒருவர் நினைத்து அவர்களது நல்வாழ்வுக்காக வழிபாடு செய்வார்கள். இது வடநாட்டில் கொண்டாடப்படும் ரக்ஷfஷா பந்தனத்தின் செல்வாக்கினால் ஏற்பட்டதாக இருக்கலாம்.
இந்திய கொண்டாட்டங்கள் பொதுவாக தூய்மை செய்தலுடன் ஆரம்பமாகிறது. பொங்கல் வருகிறது என்றதும் வீடும் சுற்றுப்புறங்களும் தூய்மை செய்யப்படுகின்றன. அசுத்தங்களை அகற்றி அழித்தல் ஒரு வகையில் தீமைகளை அகற்றி நன்மைகளை எதிர்நோக்குவதையும் குறிக்கிறது எனலாம். தமிழ் நாட்டில் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இந்த வழக்கம் அதிகம் இல்லை. அதற்குப் பதிலாக சீனவெடிகள் வாங்கப்படுகிறது. பிள்ளைகளுக்கு பட்டாசு வெடிப்பதே அதிகம் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
பொங்கல் உண்மையில் விவசாயிகளுக்குரிய விழா. அவர்கள் அறுவடையின் மகிழ்ச்சியைக் கொண்டாடி அதற்கு உதவிய இயற்கைக்கும் மாட்டுக்கும் நன்றி கூறுவதே கொண்டாட்டத்தின் நோக்கம். விவசாயமே பலரது முக்கிய தொழிலாக முற்காலத்தில் இருந்த காரணத்தால் கிராமம் முழுவதும் இதனைக் கொண்டாடியது.
சில இடங்களiல் பொங்கலின் போது ஒன்பது குதிரைகள் பூட்டப்பட்ட தேர் ஒன்றை மத்தியில் சூரியனுடன் வரைந்து அதற்குள்ளேயே பூசையை நடத்துவார்கள். பின்னர் சூரியனுக்கு படைத்த பின் அதிலிருந்து சிறிது பொங்கலை எடுத்து நீருடன் கலந்து வீடு முழுவதும் பொங்கலோ பொங்கல் என்று கூறியபடி தௌiப்பார்கள். வீடு முழுவதும் சிதறும் பொங்கல் துணிக்கைகள் வீட்டிற்கு வளத்தை கொண்டு வருவதுடன்f வீடு சூரியனால் ஆசிர்வதிக்கப்படும் என்ற நம்பிக்கை பலரிடையே உண்டு.
சூரியன் பற்றிய ஒரு சிறிய புராணக் கதையுடன் பொங்கல் பற்றிய எமது கட்டுரையை நிறைவு செய்வோம். நாம் ஏன் தைப்பொங்கலுக்கு சோறாகச் செய்யாது நன்கு அவிந்து சேர்ந்த பொங்கலாகச் செய்கிறோம். இதற்கு ஒரு புராணக் கதையில் கூறப்படும் ஒரு விவரம் சுவையான ஒரு விளக்கத்தைத் தர உதவுகிறது. புராணக்கதைகள் உண்மையல்ல. அவை எமது சமயத்தின் சில முக்கிய கருத்து வளர்ச்சிகளைக் காட்டவும், சில அடிப்படைக் கோட்பாடுகளை சாதாரண மக்களுக்கு சுவையுடன் விளக்கவும் உருவானவையே. தக்கன் யாகக் கதை பற்றி நீங்கள் அறிந்திருந்திருப்பீர்கள். அது மகாபாரதத்தில் இரு தடவைகள் கூறப்பட்டுள்ளது. அத்துடன் புராணங்களiலும் இடம் பெற்றுள்ளது. இக் கதை வேறு வகைகளiல் முக்கியம் பெற்றபோதும் நான் கூறவுள்ளது வெறும் சுவைக்காக சேர்க்கப்பட்ட ஒரு சம்பவம். தக்கன் யாகத்துக்கு சிவனைத் தவிர ஏனைய தெய்வங்களும் தேவர்களும் அழைக்கப்பட்டனர். இதனால் கோபமடைந்த சிவன் வீரபத்திரரை யாகத்தை அழிப்பதற்கு அனுப்பி வைத்தார். அவர் சென்று யாகத்தை அழித்ததுடன் அதில் பங்கு பற்றிய தேவர்கள் அனைவரையும் கடுமையாகத் தண்டித்தார். இந்த தண்டனை பற்றி தேவார திருவாசகங்கள் பல இடங்களiல் வர்ணிக்கின்றன. திருவாசகத்தில் உள்ள திருவுந்தியார் என்ற பகுதி இத்தண்டனை பற்றி விலாவாரியாக வர்ணிக்கிறது. தண்டனை பெற்றவரில் ஒருவன்f சூரியன். அவனது பற்கள் அனைத்தும் வீரபத்திரரால் உதிர்க்கப்பட்டன. சூரியனார் தொண்டை வாயிற் பற்களை வாரி நெரித்தவாறுந்தீ பற என்கிறது திருவாசகம். தொண்டை என்பது இங்கு கொவ்வை. கொவ்வைக் கனீ போன்ற சிவந்த வாயுடைய அவனது பற்கள் அனைத்தும் உதிர்க்கப்பட்டன. அவனுக்கு பல்லில்லாத காரணத்தினாலேயே நாம் அரிசியை நன்கு அவித்து பொங்கலாகச் செய்கிறோம். இது சுவைக்காகத் தரப்பட்ட விளக்கமே தவிர இதில் உண்மையொன்றும் இல்லை.
இப் பொங்கல் திருநாளiல் தமிழர் அனைவரது வீட்டுப் பொங்கல் பானைகள் நிறைய செல்வம் பொங்கி வழியட்டும். சூரியனின் ஆசிர்வாதம் அவர்fகள் வாழ்Aவில் வெள்ளமாக நிறையட்டும். எம் நாட்டிலும் எங்கும் அமைதியும் சமாதானமும் நிறையட்டும். அதற்கு இறைவன் துணை நிற்க பிரார்த்திப்போம்.
Posted at 12:43 am by Chandraleka Vamadeva
Sunday, January 18, 2004
தைப் பொங்கல் - தமிழர் திருநாள் - 3
தமிழ் நாட்டில் தைப் பொங்கல் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தின் போது வாசலில் வெவ்வேறு வகைக் கோலங்கள் போடுவது அவர்களது வழக்கம். விவசாயத்திற்கு உதவிய மழை, சூரியன், காளை மாடு ஆகியவற்றிற்கு இந்த நாட்களiல் நன்றி தெரிவிக்கப்படுகிறது. முதலாவது நாள் போகிப் பண்டிகை எனப்படுகிறது. இந்நாளiல் மழையைத் தந்து அதன் மூலம் வளம்மிகு அறுவடைக்கு உதவிய முகில்களiன் தெய்வமான இந்திரனுக்கு நன்றி கூறப்படுகிறது. இது தமிழ் மார்கழி மாத இறுதி நாளiல் இடம்பெறும். அன்று வாசலில் பெருந் தீ வளர்க்கப்பட்டு வீடுகளiல் உள்ள குப்பைகள் தேவையற்ற பொருள்கள் என்பன எரிக்கப்படுகின்றன. இரவிரவாக எரியும் அந்தத் தீயின் முன் சிறுவர்கள் சிறிய மேளங்களை அடித்து இன்புறுவார்கள். பழைய பொருட்கள் அகற்றப்பட்டு புதியவை இடம் பிடிக்கின்றன. பின்னர் வாசலை அடைத்து பெரிய கோலங்கள் போடப்படுகின்றன. இக்கோலம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியினை மாவாக்கி அதனை நீரில் கலந்து உருவாக்கிய பசையினால் கீறப்படுகிறது. இது ஒரு வகையில் வாழ்வு புதுப்பிக்கப்படுவதையும் வருடப் பிறப்புக்கான ஆயத்தத்தையும் குறிக்கிறது.
இரண்டாம் நாளான தைப்பொங்கல் நாளiல் சூரியனுக்கு பொங்கலிட்டு படைக்கப்படுகிறது. அன்று பூமி சூரியனது வடதிசை நோக்கிச் சுழல ஆரம்பிக்கிறது. அதாவது இதுவரை பூமியின் தெற்குப் பகுதியில் பிடித்த சூரிய ஒளi அன்றிலிருந்து வடக்கில் பிடிக்க ஆரம்பிக்கிறது. இதுவே சூரியன் மகர ராசியில் பிவேசம் செய்கிறது என்றும் வடக்கு நோக்கிப் பிரயாணத்தை அதாவது உத்தராயண பயணத்தை ஆரம்பிக்கின்றது என்றும் நம்பப்பட்டது. இது மழை முடிந்து கோடை தொடங்குவதற்கான கால ஆரம்பத்தைக் குறிக்கிறது. அறுவடையில் பெற்ற புதிய நெல்லைக் குற்றி அரிசியாக்கி அதனைச் சூரியனுக்கு படைத்தார்கள் தமிழர். இந்நாளiல் தானியக் களஞ்சியம் நிறைந்திருக்கும். அதற்கு உதவிய சூரியனை வழிபட்டு அவனது அருளைத் தொடர்ச்சியாகத் தரும்படி வேண்டினர். அழகான மட்பானையில் மஞ்சள், இஞ்சி இலைகளுடன் மாவிலைகளும் கோர்த்துக் கட்டப்படும். இவற்றில் இஞ்சி வாழ்வுக்கு சுவை சேர்த்தலையும், மஞ்சள் மங்கலத்தையும், மாவிலைகள் வளத்தையும் குறிக்கின்றன. இப்பானையில் இடப்படும் பால் கருப்பஞ்சாறு என்பன வளத்தையும் வாழ்வுக்கு சேர்க்கப்படும் இனிமையையும் வெளiப்படுத்த, புத்தரிசி அறுவடையில் கிடைத்த செல்வத்தைக் குறித்து நிற்கிறது. பால் பொங்கி வழிதல் குடும்பத்தில் செல்வம் சிறக்கவேண்டும் என்ற விருப்பைக் காட்டுகிறது.
கானுப் பண்டிகை அல்லது மாட்டுப் பொங்கல் எனப்படும் மூன்fறாம் நாளiல் உழுவதற்கு உதவிய மாட்டுக்கும் பாலை வழங்கும் பசுவுக்கும் பொங்கலிட்டு நன்றி கூறுவார்கள். மாட்டுப் பொங்கலன்று மாடுகள் நீராட்டப்பெற்று அழகாக வர்ணங்கள் பூசப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. அவற்றிற்கு குஞ்சங்கள் கட்டப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்படுவதுமுண்டு. அவற்றின் முன்னிலையில் பொங்கலிடப்பட்டு அவைகளுக்கு முதலில் வழங்கப்படுகிறது. இது பெருமளவில் விவசாயத்திற்காக மாடுகளை உயயோகிக்கும் பகுதிகளiலேயே நடைபெறுவது வழக்கம். சிலர் வீடுகளiல் தாம் வைத்திருக்கும் மாடுகளுக்கு பொங்கலிடுவதும் உண்டு. அன்று பொங்கலின் போது விநாயகருக்கும் பார்வதிக்கும் வழிபாடு செலுத்தப்படும். மாலையில் மாடுகள் கிராமத்தின் மத்திக்குக் கொண்டு வரப்பட்டு மஞ்சு விரட்டு என்ற காளையை அடக்கும் விழாவும் ஜல்லிக்கட்டு என்ற காளைச் சண்டை விழாவும் நடைபெறும். இது தமிழ் நாட்டில் மட்டுமே நடைபெறுகிறது. முன்னர் யாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலையில் மாட்டு வண்டிப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆழ உழுதலும் போதிய நீரும் அளவான சூரிய ஒளiயும் வளமான நெல் அறுவடைக்கு அவசியம். எனவே அறுவடையில் பெற்ற அரிசியை பொங்கலிட்டு இவற்றிற்கு வழங்கிய பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தைத் தமிழர் கொண்fடிருந்தனர். இயற்கைக்குச் செலுத்தும் இந்நன்றி இயற்கை மனித வாழ்வுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
பொங்கலின் தோற்றுவாயுடன் எந்த புராணக் கதைகளும் இணைக்கப்படாத போதும் காலப் போக்கில் அவற்றின் சில அம்சங்களுடன் எவ்வாறோ கதைகள் சேர்க்கப்பட்டுவிட்டன. முதலாவது நாளான போகிப் பண்டிகையுடன் இணைத்து ஒரு கதை கூறப்படுகிறது. போகிப் பண்டிகையன்று மழை முகிலுக்குத் தெய்வமான இந்திரனை மக்கள் வளமான உற்பத்திக்கு உதவியமைக்காக நாள் முழுவதும் வணங்கினர். இதனால் பெருமையுற்ற இந்திரனின் கர்வத்தை அடக்க கண்ணன் இந்திரனை வழிபடுவதை விட்டு கோவர்த்தன மலையை வழிபடும்படி கூறவே மக்fகளும் அவ்வாறே செய்தனர். இதனால் கோபமுற்ற இந்திரன் கடும் இடி மின்னலுடன் கூடிய பெருமழையை ஏவினான் அப்போது மக்களை காப்பதற்கு கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. பின் இந்திரன் மன்னிப்புக் கேட்கவே தொடர்ந்தும் போகிப் பண்டிகையை இந்திரனை வழிபடும் முகமாக கொண்டாடும்படி கண்ணன் கூறியதாகவும் அதனாலே தொடர்ந்து அவ்வாறு வழிபடப்படுவதாகவும் அக்கதை கூறுகிறது. இந்த போகிப் பண்டிகை இலங்கைத் தமிழரால்f ஒருபோதும் கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பண்டிகையும் அது பற்றிய புராணக் கதையும் தமிழ் நாட்டில் ஏற்பட்ட ஆரியச் செல்வாக்கின் காரணமாக பின்னர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Posted at 12:41 am by Chandraleka Vamadeva
Friday, January 16, 2004
தைப் பொங்கல் - தமிழர் திருநாள் - 2
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். இங்கே வழி என்பது எதைக் குறிக்கிறது? நாம் இன்றைய நிலையில் இதற்கு கருத்து கூறுதல் பொருத்தமற்றது. பொங்கல் பண்டிகை உருவான ஆரம்ப காலத்துச் சூழ்நிலையிலேயே இதற்fகு கருத்துக்குக் கூறுவது சரியானதாகும்.
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியா இலங்கை போன்ற நாடுகளiல் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சிக் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களiல் கடும் மழை பெய்கிறது. இப்பருவ காலம் கொண்டு வரும் மழையால் நெற்பயிர் விளைகிறது. அதே நேரம் ஆவணி மாத சிறு போக விளைச்சலால் கிடைத்த நெல்லின் கையிருப்பு அம்மாதத்தில் நடைபெறும் திருமணங்களாலும் கோயில் திருவிழாக்களாலும் குறைய ஆரம்பித்திருக்கும். இதனாலேயே ஆவணியில் இருந்து விரதங்கள் சிறியளவில் ஆரம்பிக்கின்றன. நெல்லின் கையிருப்புக் குறையக் குறைய விரதங்களiன் கடுமை அதிகரிக்கிறது. ஒரு நேரம் உண்ணும் அல்லது உண்ணாமலே இருக்கும் கடும் விரதங்கள் பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்த பின்னர் அதிகரித்திருப்பதைக் காணலாம். அதே நேரம் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் குறைந்து போயிருக்கும். அதாவது தானியம் கையிருப்பில் குறையக் குறைய விரதங்கள் அதிகரிப்பதும், சமூக விழாக்கள் குறைவதும் தானியத்தை அடுத்த அறுவடை வரை பேணுவதற்கான ஒரு உத்தியே தவிர வேறெதுவும் இல்லை. தமிழர் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து சமூகத்தினரும் பண்டைக் காலத்தில் விவசாய சுழற்சிக்கு ஏற்பவே தமது பண்டிகைகளை, சமூக விழாக்களை அமைத்திருக்கின்றனர்.
தை மாதத்தில் பெரும் போக அறுவடை நடைபெறுகிறது. தானியக் கையிருப்பு அதிகரிக்கவே சமய, சமூக விழாக்கள் அதிகரிக்கின்றன. தைப் பொங்கல் இந்த கடும் கட்டுப்பாடு நீங்கி தானியக் கையிருப்பு அதிகரித்த மகிழ்ச்சியை, அதனால் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுக்கக்கூடிய முறையில் தானியமும் அதனால் பணமும் அதிகரித்த சந்தோஷத்தை, அடை மழை நின்று போன மகிழ்ச்சியைக் கொண்டாடுவதே. நெல்விளைச்சலுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி கூறுவதே. எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதிலுள்ள வழி என்பது அறுவடையின் பின் வயலில் உருவாகும் ஒற்றையடி குறுக்கு வழியை மட்டுமன்றி, பொருளாதாரம் செழிப்படைந்ததால் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கும் சமூக விழாக்கள் கொண்டாடுவதற்கும் பிறந்த வழிகளையும் குறிக்கிறது. இதுவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கான உண்மையான கருத்து.
பொங்கல் என்பது தை என்ற தமிழ் மாதத்தின் முதலாம் நாளiல் இடம் பெறும் தைப்பொங்கலைக் குறிக்கும். பொங்கல் என்பது பொங்கு என்ற வினையடியில் இருந்து தோன்றிய சொல்லாகும். அது அவ்வாறு பொங்குதலை முக்கியமாகக் கொண்டு அரிசியினால் நன்கு அவிந்து சேரும்படியாகத் தயாரிக்கப்படும் உணவையும் குறித்து நிற்கிறது. அன்று செய்யப்படும் உணவின் பெயர் பின் அந்தப் பண்டிகையைக் குறிக்க வழங்கப்படலாயிற்று. தை முதலாம் நாளiல் இப்பொங்கல் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்யப்பட்டதால் இந்நாள் தைப்பொங்கல் என்று அழைக்கப்படலாயிற்று. இந்த அறுவடை விழா திராவிடர் மத்தியில் நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வந்ததாகவும் ஆரியரது செல்வாக்கு தமிழ் நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய போதும் இந்த பொங்கல் மாற்றவோ அழிக்கவோ முடியாதபடிக்கு தமிழர் மத்தியில் நிலைத்து நின்றுவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஏனைய பண்டிகைகளுடன் இணைந்துள்ள புராணக் கதைகள் பொங்கலுடன் தொடர்பாக இல்லாதததும் இது தூய திராவிட அதாவது தமிழரது கொண்டாட்டம் என்பதைக் காட்டி நிற்கிறது.
சங்ககால பாடலொன்றில் போர்க்களத்தில் இருந்து மீளும் அன்புக்குரியவனின் வருகை ஒரு இளம் பெண்ணின் மனதில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அந்த மகிழ்ச்சி பொங்கலுக்கு முதல் மாதம் நிலவும் மகிழ்ச்சியுடன் ஒப்பிடப்படுகிறது. பொங்கலின் முன் மழை நின்று விட்டிருக்கும் என்றும் காயா மலர்கள் அழகாக மலர்ந்திருக்க கொன்றை மலர்கள் மரம் கொள்ளாமல் மஞ்சளாக மலர்ந்து நிலத்தில் மகரந்தத்தை உதிர்த்திருக்கும் என்றும் ஆண் மானும் பெண் மானும் மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கும் என்றும் வர்ணிக்கப்படுகிறது. பொங்கலின் முன் ஏற்படும் மகிழ்ச்சியையும் மன எழுச்சியையும் இப்பாடல் உவமை முலம் விவரிக்க முற்படுகிறது.
Posted at 12:39 am by Chandraleka Vamadeva
Thursday, January 15, 2004
தைப் பொங்கல் - தமிழர் திருநாள் - 1
பொங்கல் என்றதும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு பழைய நினைவுகள் மனதின் மேற்றளத்திற்கு வருவது இயல்பு. ஜனவரி முதலாம் திகதியுடனேயே பொங்கல் ஆரவாரங்கள் அங்கு ஆரம்பித்துவிடும். இந்த ஆரவாரம் வீட்டைத் துப்பரவாக்குவதுடனும்f பொங்கலுக்கு வேண்டிய புத்தரிசிக்கு புது நெல்லை குற்றி அரிசியாக்கி பக்குவமாக எடுத்து வைப்பதுடன் ஆரம்பிக்கும். பொங்கலுக்கு முதல் கூடும் சந்தை நாளiல் பானை வாங்குவதில் கைதேர்ந்த ஒருவருடன் சந்தைக்கு போய் பொங்கலுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கப்படும். மண் பானை வாங்குவதற்கு அத்துறையில் மிகுந்த தேர்ச்சி தேவை. அதன் பல பகுதிகளும் ஆராயப்பட்டு சுண்டிப் பார்க்கப்பட்டு பானை தெரிவு செய்யப்படவேண்டும். இல்லாவிடின் பொங்கலன்று பானை மனதைச் சஞ்சலப்படுத்தும் பெரிய பிரச்சினைகளைத் தரும். சில வேளைகளiல் பானையின் கழுத்து தனியாக கழன்று விடுவதுண்டு. பல வேளைகளiல் நீரும் பாலும் ஒழுகுவதுண்டு. இத்தொல்லை வேண்டாமென்று பலர் அலுமீனிய அல்லது வெங்கல பானைகளை உபயோகிப்பார்கள். ஆயினும் புது மண் பானையில் பொங்குகின்ற சந்தோஷம் மற்றைய உலோகப் பானைகளiல் பொங்குகிற போது வராது என்பது பலரது அபிப்பிராயம். புதுப் பானையுடன், அதனைப் பொங்கலன்று அலங்கரிக்க இஞ்சி மஞ்சள் இலைகளும் அன்று சமைப்பதற்கான காய்கறிகளும் வாங்கிவரப்படும். இப்பட்டியலில் சிறுவர்களைக் கவரும் பட்டாசும் பூந்திரிகளும் இடம் பெறாமல் போகாது.
பொங்கலன்று பனிக்குளiரில் விடியலில் எழுந்து குடும்பத்தினர் அனைவரும் நீராடிய பின், முற்றத்தைக் கழுவி அல்லது மெழுகி உலக்கைகளை வைத்து நீள் சதுரமாக பொங்கல் செய்யப்படும் இடத்தை மாவினால் அடையாளப்படுத்தப்படுத்துவார்கள்f. உள்ளே போய் வருவதற்கு வாசல்கள் நாற்புறமும் விடப்பட்டு அவை கத்தி வடிவில் கீறப்படும். வீட்டின் தலைவி கிழக்குப் பார்த்த ஒரு மூலையில் நன்கு மெழுகப்பட்ட மூன்று கற்களை அடுக்கி அடுப்பை அமைப்பார். பிள்ளைகள் சரமாக தொடர்வெடி கொழுத்த வீட்டின் தலைவர் நன்கு அலங்கரிக்கப்பட்டு பாலும் நீரும் கருப்பஞ்சாறும் நிறைக்கப்பட்ட பானையை அடுப்பேற்றுவார். கிழக்கில் உதிக்கும் சூரியனை நோக்கி பால் பொங்கும் படியாக நெருப்பு எரிக்கப்படும். பால் பொங்கியதும் அரிசியைப் போட்டு ஆண் பொங்கலைத் தயாரித்துக் கொண்டிருக்க பெண்கள் சமையலறையில் பொங்கலுக்கான கறிகளையும் சம்பலையும் தயாரிப்பததில் ஈடுபட்டிருப்பார்கள். பிள்ளைகள் வெடிகொழுத்துவதில் மும்மரமாக இருக்க அங்கு ஆனந்தத்துக்கு குறைவிருக்கவில்லை. பின் சூரியனுக்கு மூன்று இலைகளiல் பொங்கல் படைக்கப்பட குடும்பத்தவர் அனைவரும் இணைந்து வழிபடுவார்கள். பின்னர் என்ன, வயிறும் மனமும் நிறையும் படியாக அனைவரும் ஒன்றாக இணைந்து விருந்துண்பார்கள். அதற்கு முன் பொங்க முடியாத அல்லது பொங்க இயலாத உறவினருக்கும் அயலவருக்கும் பொங்கலை அனுப்புவார்கள். பசியுடன் வீட்டை நாடி வருவோருக்கு வயிறு நிறைய பொங்கல் வழங்குவார்கள்.
இவ்வாறாக குடும்பம் முழுவதும் பங்கு பற்றும் ஒரேயொரு பண்டிகை பொங்கல் மட்டுமே. குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவருக்கும் அதில் பங்குண்டு. அதனால்f குடும்பம் ஒருமைப்படுகிறது. உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. மற்றவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் கொடுப்பதால் மனநிறைவு ஏற்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் மழையினால் போதிய உணவின்றித் தவித்த சின்னஞ்சிறு பூச்சிகளiன் உணவுக்காக வாசலில் இடப்பட்ட மாக்கோலம் கோடை கால வருகையை அறிவிக்கும் பொங்கலுடன் நிறைவெய்துகிறது. வாயில்லா சிறிய உயிரினங்களுக்கு இந்த வகையில் உணவளiத்த மகிழ்ச்சியும் திருப்தியும் மனதை நிறைக்கிறது. இந்த நிறைவும் மகிழ்ச்சியும் புலம் பெயர்ந்த நாடுகளiல் மாக்கோலமின்றி, மண்பானையின்றி வாழையிலைப் படையலின்றி, ஆரவாரமின்றி மின் அடுப்புகளiல் பொங்கும் போது ஏற்படுமா? நாம் நாட்டை விட்டு வந்ததால் இழந்த இன்பங்களiல் இதுவும் ஒன்று.
Posted at 12:37 am by Chandraleka Vamadeva